திருப்பூர் மாவட்டம், தாராபுரம், வரும் 17, ஆம் தேதி மதுரையில் நடைபெற இருக்கின்ற தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்ற மாநாட்டிற்கு நாட்டை காப்போம் கூட்டமைப்பு நடத்தும் இந்திய அரசமைப்பு சட்ட விழிப்புணர்வு பிரச்சாரக் கலைப்பயணம் வரவேற்பு நிகழ்ச்சி மதுரை தமிழ் மலர் கலைக்குழுவினர் சார்பில், ஜெயக்குமார் தலைமையில் பிராச்சரம் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமானது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தகர்க்கவும், மக்களிடையே மத மோதலை உருவாக்கவும், பிற்போக்கு சக்திகள் பெரு முயற்சி எடுத்து வருகின்றன, மக்களை ஒரு பதட்ட நிலையில் வைக்க விரும்புகின்றன, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகளை வரி வழங்கும் பெரும் ஊழல்களில் ஈடுபடுகின்றன, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம், ஆகிய அரசின் துறையிலிருந்து ஆளும் கட்சியின் கைப்பாவைகளை மாறி வருகின்ற மக்களுக்கு விளக்க தமிழக முழுவதும் ஆறுமுனையிலிருந்து உதகையில் தொடங்கி மதுரை மாநாட்டை நோக்கி கலைப்பயணம் செய்து பரப்புரை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் அண்ணா சிலை அருகில் நாட்டைக் காப்போம் குடிமை சமூகங்கள் முன்னெடுக்கும் இந்திய அரசமைப்பு சட்ட பாதுகாப்பு பரப்புரை கலைப்பயணத்தின் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளராக பிரான்சிஸ் கலந்து கொண்டு சிறபுரையாற்றினார்.