தாராபுரம் அருகே வெறி நாய்கள் கடித்து 30 ஆடுகள் பலி

83பார்த்தது
தாராபுரம் அடுத்த மூலனூர் அருகே கருப்பன்வலசை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் பள்ளக்காட்டு தோட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஆடுகளை பட்டி அமைத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு வழக்கம் போல ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்து விட்டு வீட்டிற்கு வந்து விட்டார். பின்னர் நேற்று(செப்.1) காலை ஆடுகளை மேச்சலுக்கு விடுவதற்கு பட்டிக்கு சென்று பார்த்தபோது அங்கு 30 ஆடுகள் இறந்து கிடந்தது.

அவை அனைத்தையும் வெறிநாய்கள் கடித்துக் கொன்று இறந்தது தெரிய வந்தது. மேலும் வெறிநாய்கள் ஆடுகளைக் கடித்துக் குதறியபோது போது 30 ஆடுகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக செத்துக் கிடந்தன. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது கருப்பன் வலசு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் வெறி நாய்கள் அத்துமீறி ஆட்டுப்பாட்டிக்குள் புகுந்து ஆடுகளை வேட்டையாடி  வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. எனவே நாய்களை கட்டுப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நாய்கள் கடித்ததில் ஆடுகள் பலியானது சம்பவத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்  என்றனர்.

தொடர்புடைய செய்தி