தாராபுரம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து 12 பேர் காயம்

82பார்த்தது
தாராபுரம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து 12 பேர் காயம்
தாராபுரம் அருகே கோவிந்தாபுரத்தில் தனியார் நூல் மில் உள்ளது. இந்த மில்லில் ரங்கம்பாளையம், தேர்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் வேலைக்கு மில் வேனில் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடிந்து மில்வேனில் பெண் தொழிலாளர்கள் தங்களது வீட்டிற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். 

தாராபுரம் நான்கு வழிச்சாலை ஒட்டன்சத்திரம் ரோடு பிரிவு அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த ரங்கபாளையத்தைச் சேர்ந்த பத்மாவதி, தேர்பட்டி பிரியங்கா, சகுந்தலா, மணி, மோகனாம்பாள், சித்ரா, பத்மாவதி, ஈஸ்வரி, ராதா, நித்தியா, சித்ரா, பிருந்தா, ஸ்ரீப்ரியா ஆகிய 12 பேர் காயமடைந்தனர். 

அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பிரியங்கா என்பவர் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைக்காக திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து தாராபுரம் காவல்துறை வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் கார்த்திக் இடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி