ஊத்துக்குளி: சாயக்கழிவு நீரால் நிறம் மாறி விஷமான கிணற்று தண்ணீர்

59பார்த்தது
ஊத்துக்குளி அடுத்த அணைப்பாளையம் கிராமத்தில் உள்ள மாமரம் பகுதியில் நொய்யல் ஆற்றங்கரை ஓரம் பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் நூறு ஆண்டுகள் பழமையான கிணற்றின் உதவியுடன் பல ஆண்டுகளாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இந்த பகுதியைச் சுற்றிலும் நான்கு சாய ஆலைகள் துவங்கப்பட்டதாகவும், அதன் பின்னர் தங்களது விவசாய கிணற்றில் தண்ணீர் மாசடைந்து உப்புத்தன்மை அதிகரித்ததாகவும் தெரிவித்துள்ளனர். 

மேலும் கடந்த ஒரு மாதமாக கிணற்று நீர் நீளம் பச்சை ஊதா நிறம் என அவ்வப்போழுது இருப்பதாகவும், இதனை விவசாயத்திற்கு கூட பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும், கால்நடைகளை வைத்துக்கொண்டு தண்ணீர் இல்லாமல் காசு கொடுத்து வெளியே வாங்கும் நிலை இருப்பதாகவும் தற்போழுது இந்த நீரின் டிடிஎஸ் அளவு 5 ஆயிரத்தை கடந்து விவசாயத்திற்கு கூட உகந்த நீராக இல்லாமல் செடிகள் பட்டு போகும் அளவிற்கு தண்ணீர் விஷமாக மாறி உள்ளது என வேதனை தெரிவித்தனர். 

மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகம் என பல முறை மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், அருகில் உள்ள சாய ஆலைகள் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதில் சாயக் கழிவுகளை வெளியேற்றுவதால் ஊற்று நீர் சாயநீராக மாறி பயிர்களுக்கு விஷமாக மாறி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி