உடுமலை அருகே மகளிர் சுகாதார வளாகம் திறக்க வலியுறுத்தல்

75பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கண்ணமநாயக்கனூர ஊராட்சிக்குட்பட்ட கண்டியக் கவுண்டனூரில் கடந்த சில மாதங்களுக்கு முன் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. தற்பொழுது போதிய பராமரிப்பு இல்லாமல் காட்சிப் பொருளாக உள்ளதால் இதை விரைவில் திறக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி