குடியிருப்பு பகுதியில் புகுந்த உடும்பு

66பார்த்தது
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஈட்டி வீரம்பாளையம் ஊராட்
சிக்கு உட்பட்ட கருக்கங்காட்டு புதூரில் உள்ள வள்ளியம்மன்
நகர் குடியிருப்பு பகுதியில் நேற்று மதியம் அரிய வகையானஉடும்பு ஒன்று புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் திடீ
ரென அச்சத்தில் உறைந்தனர். பின்னர் அவர்கள் வனத்துறை
யினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் வந்து பிடிக்க முற்பட்டபோது ஒரு தகர சந்துக்குள் போய்
மறைந்து கொண்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக
போராடி லாவகமாக உடும்பை பிடித்தனர். இதுபற்றி வேட்டை
தடுப்பு காவலர் சந்திரன் கூறுகையில், பிடிபட்ட உடும்பு காட்டிற்குள் வாழக்கூடிய அரிய வகை உயிரினம் ஆகும். இது
புல், பூச்சி, கரப்பான், செடிகளின் வேர்கள், கிழங்கு வகைகள்
உணவாக உட்கொண்டு வாழும் தன்மையுடையது. இது எறும்
புத்தின்னி வகையைச் சேர்ந்தது. இது முட்டையிட்டு குஞ்சுபொரிக்கும். நீரிலும் நிலத்திலும் வாழும். பிடிபட்ட உடும்புக்கு
4 வயது இருக்கும். 3 அடி நீளம் இருக்கும் என்றார். இதைய
டுத்து அந்த உடும்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி