உடுமலைப்பேட்டை: இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

74பார்த்தது
உடுமலைப்பேட்டை: இந்திய  ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
உச்சவரம்பு நிலங்களை பஞ்சமி நிலங்களை மீட்டுத் தர கோரி இந்தியா ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக உடுமலைப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 1984-85 களில் திமுக ஆட்சியில் கலைஞர் அவர்களால் இரண்டு ஏக்கர் நிலம் இலவசமாக தமிழக அரசால் வழங்கப்பட்டது. அந்த நிலத்தை மிட்டா மிராசுதாரர்கள் சிலர் ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு மிரட்டி வருகின்றனர். அந்த நிலத்தை மீட்டுத் தரக் கோரி நில உரிமையாளர்கள் உடுமலை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில செயலாளர் சுந்தர்ராஜன், மாவட்ட செயலாளர் எம். ஜெயன், மாவட்ட பொருளாளர் நாகராஜ், உடுமலை நகர செயலாளர் கருப்புசாமி மற்றும் துணைச் செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி