சேவூர் வாலீஸ்வரர் கோயிலில் அறங்காவலர்கள் பதவி ஏற்பு

761பார்த்தது
சேவூர் வாலீஸ்வரர் கோயிலில் அறங்காவலர்கள் பதவி ஏற்பு
சேவூர் அறம் வளர்ந்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவி லில் புதிய அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதைதொடர்ந்து சேவூர் வாலீஸ்வரர் கோவிலின் செயல் அலுவலர் சங்கர சுந்தரேஸ்வரன் தலைமையில், இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் செல்வப்பிரியா முன்னிலையில் சேவூர் வாலீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுத் தலைவ ராக சேவூர் க. பால்ராஜ் பதவியேற்றுக் கொண்டார். அவரு டன் கே. நடராஜ், மு. ராஜேந்திரன், ஆர். சரளா, கருப்பச்சாமி, ஆகியோர் புதியஅறங்காவலர்களாக பதவியேற்றுக் கொண்ட னர். புதிய நிர்வாகிகளை சிவாச்சாரியார்கள் மற்றும் பொது மக்கள் பாராட்டி வாழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி