திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள மத்திய பட்டு வளர்ச்சி வாரியம் ஆராய்ச்சி விரிவாக்க மையம் சார்பில் பட்டு விவசாயிகளுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற முகாமில் உடுமலை பகுதி சேர்ந்த பட்டுக்கூடு விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். குழு வளர்ப்பு, பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு கூடு உற்பத்தி குறித்த புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விஞ்ஞானி டேனியல், தொழில்நுட்ப அலுவலர் செல்லையா மற்றும் அதிகாரிகள் பயிற்சி அளித்தனர்.