திருப்பூர் அவினாசி பகுதியைச் சேர்ந்தவர்கள் மோனிகா, அவந்திகா. இருவரும் தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்தவாறு பகுதி நேர வேலையாக அங்கிருக்கும் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோரில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் மாணவிகள் இருவரும் ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிகள் இறப்பு குறித்து உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், காரணம் தெரியாமல் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவிகளின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.