திருப்பூர்: விவசாய தம்பதி வெட்டிக் கொலை: பரபரப்பு

53பார்த்தது
திருப்பூர்: விவசாய தம்பதி வெட்டிக் கொலை: பரபரப்பு
திருப்பூரில் வயதான விவசாய தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவிநாசி அருகே ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த பழனிசாமி (84) - பர்வதம் (70) தம்பதியை மர்ம நபர்கள் படுகொலை செய்துள்ளனர். 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி