திருப்பூர்: திருமண விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர்

77பார்த்தது
திருப்பூர் எம். எல். ஏ மகள் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய முதல்வர். திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ க. செல்வராஜ் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி செங்கப்பள்ளி மஹாலில் நடைபெற்றது. 

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஈரோடு கோவை மாவட்டங்களில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு விமான மூலம் வந்தார். அங்கிருந்து வாகனம் மூலமாக சென்ற முதலமைச்சர் வழியில் செங்கப்பள்ளியில் நடைபெற்றுக் கொண்டிருந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் மீண்டும் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்றார்.

தொடர்புடைய செய்தி