அவினாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
அவினாசியை அடுத்த பழங்கரையை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். பின்னர் நேற்று இரவு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந் தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 4½ பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்துஅவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.