ஆசிரியர் கூட்டணி ஐம்பெரும் விழா

160பார்த்தது
ஆசிரியர் கூட்டணி ஐம்பெரும் விழா
அவினாசியில் உள்ள ஒரு மண்டபத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் இயக்கத்தின் மாணிக்க விழா, பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, டாக்டர் ராதாகிருஷ் ணன் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை மீண்டவர்களுக்கு பாராட்டு விழா, 30 ஆண்டுகள் சிறப் பாக பணிபுரிந்து வரும் ஆசிரியர் பெருமக்களுக்கு பாராட்டு விழா என ஐம்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு தமிழக ஆசிரியர் கூட்டணி அகில இந்திய செய லாளர் வா. அண்ணாமலை தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் அ. வின்சென்ட் பால்ராஜ், மாநில தலைவர் மா. நம்பிராஜ், மாநில பொருளாளர் க. சந்திரசேகர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர் வட்டார செயலாளர் பா. செந்தில்குமார் வரவேற்றார். வட்டார மகளிர் அணி செயலாளர் சுசீலா உறுதிமொழி ஏற்புரை ஆற்றினார். விழாவில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட் டினை களைய வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை 6 முதல் 8-ம் வகுப்பு வரை விரிவுபடுத்தி செயல்படுத்த வேண் டும்உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக தமிழக ஆசிரியர் கூட்டணி அகில இந்திய செய லாளர் வா. அண்ணாமலை நிருபர்களிடம் கூறும்போது அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை மாற்ற வேண்டும். இணைய தள பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை அளிக்க வேண்டும். 6. 25 லட்சம் பேர் புதிய ஓய்வூதிய திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை சுயமாக அமல்படுத்துவோம் என அரசு உறுதி அளிக்க வேண்டும்என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி