அவினாசி வடக்கு வீதியில் பிரகாஷ் என் பவர் கண்காணிப்பு கேமரா கடை நடத்தி வருகிறார். நேற்று இவர் கண்கா ணிப்பு கேமரா பொருத்த கடையை பூட் டிவிட்டு வெளியே சென்று விட்டார். அப் போது திடீரென்று கடைக்குள் இருந்து கரும்புகை வெளியேறி உள்ளது. அக் கம், பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிச் சென்று பார்ப்பதற்குள் கடைக்குள் தீப்பி டித்து எரிந்துள்ளது. உடனடியாக அவர் கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியாததால் அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து தீய ணைப்பு நிலைய அலுவலர் வேலுசாமி தலைமையில் தீய ணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் கடைக்குள் இருந்த கண்காணிப்பு கேமராக்கள், கேபிள் வயர் கள் ஆகியவை தீயில் எரிந்துசேதமானது. இதன் மதிப்பு சுமார் ரூ. 5 லட்சம் இருக்கும் என்றும் கடைக்குள் மின்கசிவு காரணமாக அல்லது தீப விளக்கிலிருந்து தீப்பற்றி தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. விபத்து குறித்து அவினாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.