அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க கருணாம்பிகை உடன் மீர் அவினாசிலிங்கேசுவரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் நாள்தோறும் மூன்றுகால பூஜைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நம்பி ஆரூர் சபாவின் சிவபக்தர்கள் இணைந்து உச்சிக்கால பூஜை தினசரி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி உச்சிக்கால பூஜை தொடங்கியது.
முன்னதாக சிவனடியார் பெருமக்கள் திருமுறை விண்ணப்பத்துடன் சிவகணவாத்தியம் முழங்க, யாகபூஜை பொருட்களோடு கோவிலிலிருந்து புறப்பட்டு ரதவீதியில் வழியாக அவினாசிலிங்கேசுவரர் கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து விநாயகர் வழிபாடு, 108 வலம்புரிச் சங்குபூஜை, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தன. இதில் அவினாசிலிங்கேசுவரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், அறங்காவலர்கள் பொன்னுச்சாமி, ஆறுமுகம், விஜயகுமார், கவிதா, மணி, செயலாளர் சபரீஸ்குமார் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.