அவினாசி கோவில் பூங்காவில் பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு

78பார்த்தது
அவினாசி கோவில் பூங்காவில் பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு
அவினாசி கோவில் பூங்காவில் பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு


அவினாசியில் வரலாற்று சிறப்பு பெற்ற கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலையொட்டி உள்ள நட் சத்திர பூங்காவில் மரங்கள் மற்றும் பனை மரங்கள் உள்ளது. இந்த நிலையில் பூங்கா வில் இருந்த 2 பழமை வாய்ந்த பனைமரங் கள் தனி நபரால் அனுமதி இன்றி வெட்டப் பட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி யுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகை யில் "அத்துமீறி கோவில் பூங்காவில் இருந்த பனை மரத்தை கோவில் நிர்வாகத்தினரின் கவனக்குறைவால் வெட்டப்பட்டுள்ளது கண் டிக்கத்தக்கது. இதற்கு சம்பந்தப்பட்ட கோவில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ள னர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி