சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் சுமார் 7 விவசா யிகள் கலந்து கொண்டு 35 மூட்டைகள் நிலக் கடலையை ஏலத்திற்கு கொண்டு வந்து இருந் தனர். திருப்பூர் மற்றும் ஈரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் 2 பேர் இதில் கலந்து கொண்ட னர். மறைமுக ஏலத்தின் வாயிலாக நிலக்க டலை குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரகம் ரூ. 6, 600 முதல் ரூ. 7, 100 வரையிலும், இரண் டாம் ரகம் ரூ. 6, 200 முதல் ரூ. 6, 500 வரையி லும், மூன்றாம் ரகம் ரூ. 5, 600 முதல் ரூ. 6, 100 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 1. 02 இலட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது.