திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கனியூரில் ஜோதி கோவிலில் இருந்து, காவல் நிலையம் வரை, சாலையின் இருபுறமும் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதனால் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் திணறுகின்றன. மேலும் அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட சாலை விரிவாக்க பணிகள் இன்னும் துவங்கப்படாதது இதற்கு காரணம் என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
விரைவில் சாலையை விரிவாக்கம் செய்து விபத்துக்களை குறைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.