திருப்பூர்: நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

2587பார்த்தது
திருப்பூர்: நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு
அவினாசி மின்வாரிய செயற் பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது: அவினாசி துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (வெள்ளிக்கிழமை) இந்த துணை மின்நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணைமின்நிலையத்துக்குட்பட்ட அவினாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலி
பாளையம், கருமாபாளையம், செம்பிய நல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், சீனிவாசபுரம், பழங்கரை, முத்து செட்டிபாளையம், காமராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் ரோடு, வ. உ. சி. காலனி, கிழக்கு, வடக்கு, மேற்கு ரதவீதிகள், அவினாசி கைகாட்டி புதூர், சக்தி நகர், ராயம்பாளையம், எஸ்.பி. அப்போலஸ், குமரன் காலனி, ராக்கியாபாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதேபோல் உடுமலை அருகே கிழவன் காட்டூர் துணை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிழவன் காட்டூர், எளையமுத்தூர், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதி நகர், கோவிந்தாபுரம், அமராவதி செக் போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பா நாயக்கனூர், ஆலம்பாளையம், சாமராயப்பட்டி, பெருமாள் புதூர், குமரலிங்கம், கொழுமம், ருத்ரா பாளையம், குப்பம்பாளையம், பார்த்தசாரதிபுரம், வீரசோழபுரம் ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி