அவினாசி: கருப்பராயன்-கன்னிமார் சாமி கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா

78பார்த்தது
அவினாசி: கருப்பராயன்-கன்னிமார் சாமி கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா
அவினாசி சுகாதார ஊழியர் வீதியில் ஸ்ரீ பட்டத்தரசி அம்மன், ஸ்ரீ வைஷ்ணவி, ஸ்ரீ மகேஸ்வரி, ஸ்ரீ துர்க்கை அம்மன், ஸ்ரீ கருப்பராயன், ஸ்ரீ கன்னிமார் சாமி கோவில்கள் உள்ளன. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்கல் பூச் சாட்டு விழா நடைபெறும். 

அதேபோல் இந்த ஆண்டும் 11-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து மேள தாளம் அதிர்வேட்டுகள் முழங்க பெண்கள் தீர்த்த குடம் எடுத்துவந்தனர். இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு படைக்களம் எடுத்தல், 10 மணிக்கு பொங்கல் வைத்தல், பகல் 12 மணிக்கு கிடாய் வெட்டுதல், மாலை 3 மணிக்கு மாவிளக்கு எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் விமரிசையாக நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி