திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் பண்ணை வீடுகளில் தனியாக வசிப்பவர்களின் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பெருமாநல்லூர் போலீசார் பண்ணை வீடுகளுக்கு சென்று துண்டுப்பிரசுரம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பெருமாநல்லூர் பகுதியில் தோட்டத்தில் வசித்து வரும் பொதுமக்களை நேரில் சந்தித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரசன்னா, லோகநாதன் ஆகியோர் பிரசுரங்கள் கொடுத்து பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் அறிவுரை கூறி வருகிறார்கள்.
அந்த துண்டுப்பிரசுரத்தில் ''உங்கள் வீட்டின் அருகில் யாரேனும் சந்தேகப்படும்படியான ஆட்கள் தென்பட்டால் உடனே போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வியாபாரிகள் போல் யாரேனும் வீட்டின் அருகில் வந்தால் மிகக் கவனமாக இருக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. மேலும் போலீசார் கூறுகையில், குற்றச்சம்பவங்களிலிருந்து மக்களை பாதுகாக்க பொதுமக்களும் போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றனர். அவசர உதவிக்கு தொலைபேசி எண் 9498101344 மற்றும் 100-ஐ தொடர்புகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.