20 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்.

66பார்த்தது
திருப்பூர்:
திருமுருகன் பூண்டி நகராட்சி அலுவலக சுற்றுச்சுவர் இடிந்து விபத்து‌. தனியார் டூவீலர் ஸ்டேண்டில் விழுந்து 20 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள திருமுருகன் பூண்டி நகராட்சி அலுவலகம் பழமையான கட்டிடம் ஆகும். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் சுற்றுச்சுவர் கருங்கற்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த நகராட்சி அலுவலகம் அருகிலேயே தனியாருக்கு சொந்தமான இருசக்கர வாகன நிறுத்துமிடம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் ரத்தினசாமி கடந்த 30 ஆண்டுகளாக இருசக்கர வாகன நிறுத்தும் இடத்தை பராமரித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை நகராட்சி அலுவலகத்தின் மிகப் பழமையான சுற்றுச்சுவர் பலமிழந்து சரிந்து அருகில் இருந்த தனியார் வாகன நிறுத்துமிடத்தில் விழுந்தது. இதில் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் 20 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் முழுமையாக சேதமடைந்தது. நல்வாய்ப்பாக அந்த இடத்தில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. சேதமடைந்த வாகனங்களின் மதிப்பு சுமார் 6 முதல் 7 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நகராட்சி அலுவலர்களின் உதவியுடன் இடிபாடுகளை அகற்றி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி