பெருமாநல்லூர் அருகே கோவை சேலம் தேசிய நெடுஞ்சா லைகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இதையொட்டி நெடுஞ்சாலைகளின் நடுவே தடுப்புகளில் செவ்வரளிப்பூ செடி கள் அதிகளவில் வளர்க்கப்படுகிறது. இவற்றை லாரியின் மூலம் தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்பட்டு வருகின்றன. செவ்வ ரளிப்பூ செடிகள் விஷத்தன்மை கொண்டவை என்றாலும், அவற்றின்மூலம்பல்வேறு நன்மைகள் கிடைக்கிறதுஎன்ப தால்தான், நெடுஞ்சாலைகளின்நடுவே உள்ள தடுப்புகளில் அவற்றை வளர்க்கின்றனர்.
நெடுஞ்சாலைகளின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணம் செய்கின்றன. இதில், கார், லாரி மற் றும் பஸ் என பலதரப்பட்ட வாகனங்கள் அதிகப்படியான புகையை வெளியேற்றுகின்றன. இதன் காரணமாக சுற்றுச்சூ ழல் மிக கடுமையாக மாசடைகிறது. வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகையில் கார்பன் துகள்கள் அதிகளவில் கலக் கின்றது. இதனால் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்க ளுக்கு சுவாச பிரச்சினைகள் ஏற்படும். இந்த பிரச்சினையை குறைக்க அதிகளவில் இத்தகைய செடிகள் வளர்க்கப்படுகின் றன. நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது தூய்மை யான காற்றை சுவாசிப்பதற்கு செவ்வரளி செடிகள் உதவி செய்கின்றன. காற்று மாசுபாட்டை குறைக்கின்றது. அத்துடன் இவை நெடுஞ்சாலைகளுக்கு கூடுதல் அழகை சேர்த்து, மனதை இதமாக்குகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று தண்ணீர் லாரி மூலம் அனைத்து செடிகளுக்கும் நீர் ஊற்றப் பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.