திருட்டு வழக்கில் கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
அவினாசியை அடுத்து தெக்கலூர் ராணுவ முகம் எதிரில் வசித்து வருபவர் குமார் (வயது 31) கட்டிடத்தொழிலாளி கடந்த 17. 12. 23 அன்று இவரும் இவரது மனைவியும் வீட்டில் தூங்கி கொண்டி ருந்தனர் நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் இவர்களது வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்து தம்பதியரை கத்தி ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள 2 செல் போன், ரூ. 10ஆயிரத்து 500 ரொக்கம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய வற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென் றனர். இது குறித்த புகாரின்பேரில் அவி னாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவை மதுக்கரையை சேர்ந்த கிஷோர் குமார் (21) மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த ரமேஷ் (32) ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவர் மீதும் ரமேஷ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டதின் பேரில் அவர்களை குண்டர் சட்டத் தில் கைது செய்ததற்கான உத்தரவினை வழங்கினர்.