அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடை பெற்று வருகிறது. அதன்படி நேற்று நடந்த ஏலத்திற்கு 671 மூட்டைகளில் பருத்தி கொண்டு வரப்பட்டு இருந்தது. இதில் ஆர். சி. எச். ரகப்பருத்தி குவிண்டால் ரூ. 6,800 முதல் ரூ. 7,689 வரையும், மட்ட ரகப்பருத்தி ரூ. 2,000 முதல் ரூ. 3,000 வரையும் விற்பனை ஆனது. மொத்தம் ரூ. 15 லட்சத்து 68 ஆயிரத்துக்கு ஏலம் போனதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். திருப்பூர், அவினாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் பருத்தியை ஏலம் எடுத்துச்சென்றனர்.