கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எம். எல். ஏ. ஜெயக்குமார் பங்கேற்பு

53பார்த்தது
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எம். எல். ஏ. ஜெயக்குமார் பங்கேற்பு
ஊத்துக்குளி தாலுகாவிற்கு உட்பட்ட குன்னத்தூர் பேரூராட்சி பகுதியில் நேற்று அ.தி.மு.க சார்பில் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து பரிசுப்பொட்டலங்களை வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் ஊத்துக்குளி வடக்கு ஒன்றிய செயலாளர் தனசேகர், குன்னத்தூர் பேரூர் செயலாளர் சரண்பிரபு, ஒன்றிய சிறுபான்மை செயலாளர் ராகுல், பொதுக்குழு உறுப்பினர் கண்ணம்மாள் ராமசாமி, பேரூர் துணைச் செயலாளர் கார்த்திகேயன், வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் அருண்குமார், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி