அவிநாசி தி. மு. க வினர் பட்டாசு வெடித்தும், கொண்டாட்டம்.

76பார்த்தது
40 தொகுதிகளிலும் தி. மு. க வின் கூட்டணிக் கட்சிகள் மாபெரும் வெற்றி அடைந்ததை முன்னிட்டு அவிநாசி தி. மு. க வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.


நடந்து முடிந்த 18-வது நாடாளுமன்றத் தேர்தலில், தி. மு. க தலைமையிலான கூட்டணி கட்சி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள 40 தொகுதிகளிலும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது, அதனை கொண்டாடும் வகையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி பேரூர் கழக தி. மு. க, மற்றும் ஒன்றிய கழக தி. மு. க சார்பாக, அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பும் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் பட்டாசுகள் வெடித்தும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், மற்றும் அங்கு இருந்த பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

மேலும் இந்த வெற்றி கொண்டாட்டத்திற்கு அவிநாசி பேரூர் கழக செயலாளர் திராவிடன் வசந்த் தலைமையில், அவைத்தலைவர் ராயப்பன் முன்னிலையில்,
நகர துணைச் செயலாளர் பர்க்கத்துல்லா, சீனிவாசன், சாந்தி,
பொருளாளர் தங்கவேலு,
மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், வேலுச்சாமி, பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி, மற்றும்
பேரூராட்சி திமுக மன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டு வெற்றியை குறித்து கோஷங்கள் எழுப்பி கொண்டாடினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி