உடுமலை பகுதியில் உள்ள பெரியகுளம் ஒட்டுக்குளம் அம்மாபட்டி உள்ள பல்வேறு குளங்கள் மூலமாக 2700 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது பகல் நேரத்திலேயே மர்மநபர்கள் மது அருந்திவிட்டு காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் இதர கழிவுகளை சட்டப்பகுதியில் வீசிச் சென்று வருகின்றனர். இதனால் தண்ணீர் திறக்கும் போழுது கழிவுகள் குளத்தினுள் கலந்து மாசு ஏற்படுகின்றது. சற்றுக்கூட பிளாஸ்டிக் பாட்டில்களை வீசுவதால் அடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களுக்குள் தண்ணீர் திறக்கும் போது சிக்கல் ஏற்படுகின்றது. எனவே காவல்துறையினர் இந்த பகுதிகளில் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.