திருப்பூர்: விவசாயியிடம் வெங்காயம் வாங்கி ரூ. 3லட்சம் மோசடி

83பார்த்தது
திருப்பூர்: விவசாயியிடம் வெங்காயம் வாங்கி ரூ. 3லட்சம் மோசடி
திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா சேவூர் அருகே குமா ரபாளையம் புல்லாக்காரர் தோட்டத்தை சேர்ந்த விவசாயி ராஜ்குமார். இவர் தனது தோட்டத்தில் பயிரிட்டு அறுவடை யான 10 டன் வெங்காயத்தை விற்பனைக்காக வைத்திருந் தார். இதைத்தொடர்ந்து, முகநூலில் கோவை குனியமுத்தூ ரைச் சேர்ந்த அன்வர் சதாத் (வயது 42) என்பவர் கொடுத்தி ருந்த விளம்பரத்தை நம்பி 10 டன் வெங்காயத்தை லாரி மூலம் அனுப்பி வைத்துள்ளார். பிறகு, அவர் வெங்காயத்திற் கான ரூ. 3 லட்சத்து 30 ஆயிரத்தை காசோலையாக கொடுத் துள்ளார். 2 நாட்கள் சென்ற பிறகு காசோலையை வங்கியில் செலுத்திய போது, அவரது கணக்கில் பணம் இல்லை எனத் தெரியவந்ததால், ராஜ்குமார் அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர் செல்போனில் அழைத்த போது, பல்வேறு காரணங் களை கூறி ஏமாற்றி வந்துள்ளார். இதனால் ஏமாற்றம் அடைந்த ராஜ்குமார் சேவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்வர் சதாத்தை தனிப்படையினர் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த அன்வர் சதாத்தை கோவையில் நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் விசா ரணையில் ஏற்கனவே அன்வர் சதாத் மீது கோவையில் விவ சாயிகளை ஏமாற்றிய வழக்குகள் இருப்பதாக தெரிய வந் தது.

தொடர்புடைய செய்தி