அவிநாசி: வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு பிடிபட்டது

1039பார்த்தது
அவிநாசி: வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு பிடிபட்டது
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த சேவூர் ஊராட்சி குலாலர் வீதியில் குழந்தைவேல் என்பவரது வீட்டிற்குள் பாம்பு புகுந்துள்ளது. இதையறிந்த அப்பகுதி மக்கள் அவினாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி வீட்டிற்குள் இருந்த 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்தனர். பின்னர் அந்தப் பாம்பை வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர். பாம்பைப் பிடித்த தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி