சேவூர் அருகே தீ விபத்தில் வீடு எரிந்து சேதம்

571பார்த்தது
சேவூர் அருகே தீ விபத்தில் வீடு எரிந்து சேதம்
சேவூர் அருகே தீ விபத்தில் வீடு எரிந்து சேதம்

அவினாசி ஒன்றியம் சேவூர் அருகே வேட்டுவபாளையம் ஊராட்சி அ. குரும்பபாளையம் ஆதிதிராவிடர் காலனி பகு தியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 38). பனியன் நிறுவன தொழிலாளி. இவருக்கு மனைவி சாவித்திரி (32) மகள் விமலா, மகன் தினேஷ் உள்ளனர். பழனிச்சாமி வழக்கம் போல் நேற்று காலை வேலைக்கு சென்று விட்டார். இவரது மனைவியும், மகளும் கோவிலுக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்றுகாலை 11 மணியளவில் இவர்களது ஓட்டு வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்து உள்ளது. உடனே அரு கில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீ மளமளவென எரிய தொடங்கியது. இதைத் தொடர்ந்து அவினாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் ஓட்டு வீடு முழுவதும் எரிந்து சேதமானது. இதில் வீட்டு பத்திரம், டி. வி. , பேன் மற் றும் ஆதார்கார்டு, ஸ்மார்ட் கார்டு உள்ளிட்டவைகள் தீயில் எரிந்து சேதமானது. தீவிபத்து குறித்து சேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி