சேவூர் - புளியம்பட்டி சாலை சந்தைப்பாளையம் பிரிவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் அவி னாசி பட்டறை பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 24), அதே பகுதியைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (23) என்பது தெரியவந்தது. இவர்கள் ராமியம்பாளையத்தில் இரும்பு தகடு களைத் திருடியவர்கள் என்பதும் தெரியவந்தது. இது குறித்து சேவூர் போலீசார் ரவிச்சந்திரன், கோகுலகிருஷ்ணன் ஆகி யோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து இரும்பு தகடுகளை பறிமுதல் செய்தனர்.