திருப்பூர்; செல்போன், பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது

589பார்த்தது
திருப்பூர்; செல்போன், பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் அசன்டியா சர்தார் (வயது 45). இவரது மனைவி சுபிதா. இவர் குடும்பத்தினருடன் ஈட்டி வீரம்பாளையத்தில் வீடு எடுத்து தங்கி நியூ திருப்பூர் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று கடைக்குச் செல்வதற்காக பெருமாநல்லூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். 

முட்டியன்கிணறு அருகே வந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அவரை வழிமறித்து பணம் மற்றும் செல்போன் கேட்டு மிரட்டினர். இதைக் கவனித்த அக்கம் பக்கத்தினர், அவர்கள் 2 பேரையும் பிடித்து, பெருமாநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், திருப்பூர் பாண்டியன்நகர் செட்டிபாளையம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (27), சிவா (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி