திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று (அக்.04) மாலை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்க இருந்த நிலையில் தங்கக்கொடி மரம் சேதமடைந்துள்ளது. கொடிக் கம்பத்தில் கருடக் கொடி ஏற்றப்பட இருந்த இரும்புக் கொக்கி உடைந்தது. இதையடுத்து, திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் பழுதுபார்க்கும் பணியில் ஈடிபட்டு வருகின்றனர். பிரம்மோற்சவம் முன் தங்கக்கொடி மரம் சேதம் அடைந்துள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.