கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் இனுங்கூர் அருகேயுள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகன் கார்த்திக் (19), கரூர் வெங்கமேடு பகுதி சலூன் கடைத் தொழிலாளி. அவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த வீ. மணிகண்டன். இருவரும் பழனி கோயிலுக்கு செல்ல இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர். வாகனத்தை கார்த்திக் ஓட்டினார்.
கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜீயபுரம் அருகே கடியாக்குறிச்சி பேருந்து நிறுத்தப் பகுதியில் சென்றபோது எதிரே திருச்சியிலிருந்து கரூர் நோக்கிச் சென்ற அடையாளம் வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மணிகண்டன் மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் திருச்சி போலீஸார் வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தைத் தேடுகின்றனர்.