திருச்சி சிறுகனூர் அருகே எம். ஆர். பாளையம்: வனவிரிவாக்க மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மண்டல தலைமை வனப்பாதுகாவலர் ந. சதீஷ், மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்தார். இதில் வனப் பாதுகாவலர் இரா. சரவணக்குமார், வாய்ஸ் அறக்கட்டளை தலைவர் கிரிகோரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும், காப்புக்காட்டில் விதைப்பந்துகள் தூவப்பட்டன. இதையடுத்து சிறுகனூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
காஜாமலைக் காலனி அருகில் உள்ள இ பி காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருச்சி வனச்சரக அலுவலர் முருகன் தலைமை வகித்தார். குடியிருப்போர் நலச் சங்க தலைவர் விஜயராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அந்த பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில், குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் சுந்தர், நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.