திருச்சி தென்னூர் மகாத்மா காந்தி பள்ளி அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து இறந்தவரின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து புத்தூர் கிராம நிர்வாக அலுவலர்
ராஜேஷ் குமார் தில்லைநகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.