ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையத்தின் தற்போதைய நிலை என்ன?

68பார்த்தது
ஸ்ரீரங்கம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. திருச்சி ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையத்திற்கான பணிகளை கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது. இதனால் திருச்சி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு உத்தரவின் பெயரில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டு அங்கே பணிகள் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஶ்ரீரங்கத்தில் 11. 10 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து 11. 10 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடக்க விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு அடிக்கல் நாட்டி பேருந்து நிலையத்தின் பணிகளை வெற்றிகரமாக தொடங்கி வைத்தார். தற்போது இந்த பணிகள் அனைத்தும் துரிதமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் எப்போது திறக்கப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி