மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கையுந்து பந்து போட்டி மதுரை வி. எம். ஜே. மேல்நிலைப் பள்ளியில் மூன்று நாட்கள் போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி உறையூர் எஸ் எம் மேல்நிலைப்பள்ளி கையுந்து பந்து அணி எதிர்த்து விளையாடிய அனைத்து அணிகளையும் வென்று மாநில அளவிலான கோப்பையை வென்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.