திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சத்திரப்பட்டி அருகே இனாம்குளத்தூரில் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, ஒரு லாரியில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதிலிருந்த இருவர் தப்பிவிட ஒருவரை பிடித்து நடத்திய விசாரணையில் அவர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த க. தர்மதுரை (33) என்பதும், புதுக்கோட்டை மாவட்டம் தோப்புப்பட்டி குளத்திலிருந்து மணல் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் லாரி ஒரு இயந்திரத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.