திருச்சிக்கு உதயநிதி ஸ்டாலின் நாளை வருகை

81பார்த்தது
திருச்சிக்கு உதயநிதி ஸ்டாலின் நாளை வருகை
திருச்சி மாவட்டத்துக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (31ம் தேதி) வருகை தருகிறார். திருச்சி விமானத்திற்கு பவரும் தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதைதொடர்ந்து விமான நிலையத்திலிருந்து காரில் சாலை மார்க்கமாக நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள மருத்துவமனையை திறந்து வைக்கிறார். இதைதொடர்ந்து சூரியூர் எலந்தைபட்டியில் சிப்காட் மற்றும் ஒலிம்பிக் ஸ்டேடியம் அமையவுள்ள இடங்களை பார்வையிடுகிறார். பின்னர் சூரியூரில் அமையவுள்ள ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தை அமைச்சர் உதயநிதி பார்வையிடுகிறார். தொடர்ந்து 31ம் தேதி மாலை பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் பணியை பார்வையிடுகிறார்.
பின்னர் மத்திய பேருந்து நிலையம் அருகே கலையரங்கில் நடைபெறும் விழாவில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், நான் முதல்வன் பணி ஆனை வழங்குதல் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதைதொடர்ந்து திருச்சி சுற்றுலா மாளிகைக்கு சென்று இரவு தங்குகிறார். ஆகஸ்ட் 1ம் தேதி காலை சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டு அந்தநல்லூர் திருப்பராய்த்துறையில் உள்ள பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்கிறார். பின்னர் தென்பறைநாடு புத்தூரில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து பொதுமக்களுடன் கலந்துரையாடி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார

தொடர்புடைய செய்தி