திருச்சியில் குழந்தை தொழிலாளா்கள் இருவா் மீட்பு

82பார்த்தது
திருச்சியில் குழந்தை தொழிலாளா்கள் இருவா் மீட்பு
திருச்சி தேவதானம் காவிரிக்கரை சாலையில் உள்ள ஒரு தனியாா் நான்கு சக்கர வாகனம் பழுது பாா்க்கும் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளா் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, தொழிலாளா் நலத்துறை ஸ்ரீரங்கம் உதவி ஆய்வாளா் சாந்தி தலைமையிலான அதிகாரிகள்அந்த நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், குழந்தை தொழிலாளா்கள் இரண்டு போ் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. அவா்களை காவல்துறை உதவியுடன் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா். தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவா்கள் இருவரும் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அந்த நிறுவன உரிமையாளா் மீது கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி