திருச்சி தெற்குமாவட்ட திமுக தெருமுனை பிரச்சார கூட்டம்

73பார்த்தது
திருச்சி தெற்குமாவட்ட திமுக தெருமுனை பிரச்சார கூட்டம்
திருச்சி தெற்கு மாவட்ட திமுக, மாநகர திமுக மற்றும் மலைக்கோட்டை பகுதி திமுக இணைந்து கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா தெருமுனைக் கூட்டத்தை நடத்தின. வடக்கு ஆண்டார் வீதியில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
பேசியது:
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இடையில் தேர்தல் வந்ததால் தடைபட்டிருந்த தெருமுனைக் கூட்டத்தை நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது.
குற்றவியல், தண்டனை, சாட்சிய சட்டங்களை திருத்துவதகாகக் கூறி குறிப்பிட்ட மொழியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. ஹிந்தி மொழியாக இருந்தாலும், வேறு எந்த மொழியாக இருந்தாலும் கட்டாயமாக திணிக்கப்படுவதை தொடர்ந்து எதிர்ப்போம் என்றார் அமைச்சர்.
கூட்டத்துக்கு வட்டச் செயலர்கள் சங்கர், சரவணசெல்வன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் மு. மதிவாணன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், நூற்றுக்கணக்கான ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. பகுதிச் செயலர் மோகன் வரவேற்றார். மாமன்ற உறுப்பினர் மணிமேகலை நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி