முன்னாள் பாரத பிரதமரும் பொருளாதார மேதையுமான மறைந்த டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம். சரவணன் தலைமையில் மூத்த காங்கிரஸ் தலைவர் கண்ணையன் ராஜா, சிந்தாமணி கணேசன் ஆகியோர் முன்னிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் வளைவில் இருந்து அமைதி ஊர்வலமாக பெரிய கடை வீதி கல்லத்தெரு சந்துக்கடை மலைக்கோட்டை என் எஸ் பி ரோடு ஆகிய பகுதி வழியாக அமைதி ஊர்வலமாக அன்னாரது திருவருகை படத்தை கையில் ஏந்தி தெப்பக்குளம், காந்தி சிலை அருகில் அமைதி ஊர்வலம் நிறைவு பெற்றது.
அதன் பிறகு மாநில காந்தி சிலை முன்பு இரங்கல் கூட்டம் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம். சரவணன் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகள் மாநில பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.