திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் பேட்டி

50பார்த்தது
திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் பேட்டி
திருச்சி ரயில்வே கோட்டத்தில் 496 லெவல் கிராசிங் பகுதிகள் உள்ள நிலையில் இருப்புப் பாதைகளில் சேதத்தை ஏற்படுத்துதல், விதிகளை மீறுதல் உள்ளிட்டவை தொடர்பாக கடந்தாண்டு 86 வழக்குகள் பதியப்பட்டு ரூ. 8. 76 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
கடந்த ஓராண்டில் திருச்சி கோட்டத்தில் ரயில்கள் செல்லும் நேரத்தில் இருப்புப் பாதையைக் கடந்து சென்ற 220 கால்நடைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளன. இதேபோல இருப்புப் பாதை விபத்துகளில் கடந்தாண்டு நடந்த 262 விபத்துகளில் 230 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருச்சி கோட்டத்தில் ஆளில்லாத ரயில்வே கிராசிங் பகுதிகளே இல்லை என்றாலும் பொதுமக்களின் கவனக்குறைவால் விபத்துகள் ஏற்படுகின்றன. இருப்பினும், விபத்துகளைத் தடுக்கவும், உயிரிழப்புகள் இல்லாமல் செய்யவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இருப்புப் பாதையை பயன்படுத்தும் பொதுமக்களும், பயணிகளும் கவனமாகச் செயல்பட வேண்டும் என்றார் அவர்.

தொடர்புடைய செய்தி