திருச்சி விமான கடத்தல் தங்கம் பறிமுதல்

75பார்த்தது
திருச்சி விமான கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் லேப்டாப்பில் தங்க தகடுகளை மறைத்து எடுத்து வந்த 3 பேர் கைது - தங்க தகடு, தங்க கட்டி , தங்க செயின் என ரூ. 26 லட்சம் மதிப்புள்ள 390 கிராம் தங்கம் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது 3 ஆண் பயணிகள் தங்களது லேப்டாப்பில் மறைத்து வைத்து எடுத்து வந்த தங்க தகடுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து தங்க கட்டி மற்றும் தங்க சங்கிலி ஆகியவற்றையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை 390 கிராம் அவற்றின் இந்திய ரூபாய் மதிப்பு 26 லட்சம் ஆகும்.

தொடர்புடைய செய்தி