திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் சொரத்தூர் பஞ்சாயத்து பெருமாள் மலை அடிவாரத்தில் உள்ள எம்ஜிஆர் நகரில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடத்தை திமுகவினர் தங்களது பினாமி பெயரில் ஆக்கிரமிப்பு செய்து கூடாரம் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தங்களது கிராமத்தில் எந்த ஒரு அரசு கட்டிடம்மோ, அடிப்படை வசதிகளோ இல்லை என குற்றம் சாட்டினர்.
எனவே அந்த ஆக்கிரமிப்பு இடத்தை அகற்றி தங்களது பகுதி மக்களுக்கு ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி மையம் அமைத்து தர வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.