சேலம் மாவட்டம் சூரமங்கலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நடந்த நேற்று திருச்சியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது பேருந்தில் இருந்து இறங்கி கிராப்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த 1000 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றார். இதுகுறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கம்பரசம்பேட்டை பெரியார் நகரைச் சேர்ந்த காக்கா சூர்யா என்ற வாலிபரை கைது செய்தனர்.