திருச்சி-காரைக்குடி ரெயில் 4 மணி நேரம் தாமதமாக புறப்படும்

68பார்த்தது
திருச்சி-காரைக்குடி ரெயில் 4 மணி நேரம் தாமதமாக புறப்படும்
திருச்சி ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -
மதுரை ரெயில்வே கோட்டை ரெயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதன்படி வண்டி எண்: 06829 திருச்சியில் இருந்து காரைக்குடி வரை செல்லும் டெமு ரெயில் திருச்சி ரெயில் நிலையத்திலிருந்து காலை 10. 15 மணிக்கு புறப்பட்டு செல்லும். தற்போது மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி இந்த மாதம் (ஜூலை) முழுவதும் நடைபெறுகிறது.
இதில் ஞாயிற்றுக்கிழமைகளை மற்றும் வருகிற 17-ந்தேதி மொகரம் பண்டிகை தவிர மற்ற நாட்களில் 4 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக மதியம் 2. 30 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி